அழகு சந்தையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது யூரோ கொஸ்மெட்டிக்ஸ் (பிரைவட்) லிமிடெட்

அழகு சந்தையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது யூரோ கொஸ்மெட்டிக்ஸ் (பிரைவட்) லிமிடெட்

SME Inspirations

Commercial Bank LEAP Team

Commercial Bank LEAP Team

42 week ago — 5 min read

நிறுவனம்: Euro Cosmetic (pvt) Ltd

நிறுவனர்: கெமுனு வீரவர்தன

தொழில்: அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகம்

இது நிறுவப்பட்ட ஆண்டு: 2009

இடம்: பொரளை

 

“சவினா” என்று சொன்னால் நினைவுக்கு வரும் விற்பனை வலையமைப்பு பற்றி புதிதாகச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் சவினா ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய விற்பனை வலையமைப்பு. மேலும், சமீப காலங்களில் புரட்சிகரமான இலங்கை அழகு சாதனப் பொருட்களைப் பற்றி எண்ணும் போதே, உங்கள் நினைவுக்கு வரும் ஒரே பெயர் Viana தயாரிப்பு வரிசை. எனவே இந்த புரட்சிகர யோசனைகளின் பின்னால் உள்ள சிறந்த நிறுவனர் உடன் இன்று பேசுவோம். அவர்தான் Euro Cosmetics (Pvt.) Ltd நிறுவனர் கெமுனு வீரவர்தன.

 

 

01) முதலில் உங்கள் வணிகத்தின் தொடக்கத்தைப் பற்றி பேசுவோமா?

எங்கள் கதை 1991 இல் தொடங்குகிறது. இது இலங்கையில் அழகுக் கலையில் மற்றும் அழகு சாதன சந்தையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. முதலில் "சவினா" விற்பனையகங்களின் வலையமைப்புடன் சந்தைக்குள் நுழைந்தோம். இது மிகவும் பிரபலமான விற்பனையக வலையமைப்பாக மாறியது. பின்னர் 32 வருட அனுபவத்துடன், 2010 இல் எங்கள் Viana Cosmetic

வியாபாரக்குறியை அறிமுகப்படுத்தியதன் மூலம் எங்கள் வணிகத்தில் மற்றொரு பரிமாணத்தை அடைந்தோம். Viana என்பது சர்வதேச தரம் வாய்ந்த அழகுசாதனப் பொருட்களை மிகவும் நியாயமான விலையில் பரந்தளவிலான தேர்வுகளை வழங்கும் ஒரு வியாபாரக்குறி ஆகும். 2014 ஆம் ஆண்டில், சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்புப் பொருட்களை அறிமுகப்படுத்தி இந்த சந்தையில் எங்கள் பெயரை மேலும் நிலைநிறுத்தினோம். 2017 ஆம் ஆண்டில், இலங்கையில் முதன்முறையாக, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் அதிகமானோரின் வேண்டுகோளாக இருந்த சல்பேட்டுகள் இல்லாத இயற்கை மூலப்பொருட்களை மட்டுமே கொண்ட தயாரிப்புகளின் வரிசையாக அறிமுகப்படுத்தினோம். இன்று, ஒப்பனை பொருட்கள் முதல் சருமம் மற்றும் கூந்தல் பொருட்கள் வரை ஏயையெ முற்றிலும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் கண்டுபிடிப்புகளின்படி, ஏற்றுமதி சந்தைக்காக பல தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

02) உங்கள் வணிகம் ஏனைய போட்டி வணிகங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

சந்தை ஆராய்ச்சி மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை அடையாளம் காண்பதன் மூலம் நாங்கள் எப்போதும் எங்கள் தயாரிப்புகளை வழங்குகிறோம். மேலும் தரமான பொருட்களை மட்டும் வழங்குவதே எங்கள் நோக்கம்.

 

03) உங்கள் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட மற்றும் சமீபத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

ஒரு புகழ்பெற்ற வியாபாரக்குறியாக, Viana எப்போதும் புதிய சர்வதேச போக்குகளுடன் பொருந்தக்கூடிய தயாரிப்புகள் மற்றும் பேக்கேஜிங் மீது கவனம் செலுத்துகிறது. ஆனால் இலங்கையில் உயர்தர பேக்கேஜிங் தெரிவுகள் இல்லாமை மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள தடைகள் நாம் எதிர்கொள்ளும் சவாலாகும்.

 

04) உங்களின் எதிர்கால வணிகக் கனவைப் பற்றிப் பேசுவோமா?

ஒரு நிறுவனமாக எங்களின் முன்னுரிமை, எங்கள் வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து, போட்டி விலையில் தேர்வு செய்யக்கூடிய பரந்த தெரிகளுடன் மிக உயர்ந்த தரமான அழகு சாதனப் பொருட்களை வழங்குவதாகும். எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை மற்றும் திருப்தியை மேம்படுத்தும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக சர்வதேச அழகு துறையில் சமீபத்திய போக்குகளை ஆராய்ந்து செயற்படுவது எங்கள் எதிர்பார்ப்பாகும். இதன்படி, பெருமைமிக்க இலங்கை வர்த்தக நாமமாக Viana விற்கான சர்வதேச பார்வையை அதிகரிக்க நாங்கள் நம்புகிறோம்.

 

05) உங்கள் பயணத்தின் போது கொமர்ஷல் வங்கியிடமிருந்து ஆதரவு எவ்வாறு கிடைத்தது?

Euro Cosmetic (Pvt) Ltd எங்களை விரிவுபடுத்துவதில் கொமர்ஷல் வங்கி முக்கிய பங்கு வகித்துள்ளது. மேற்கூறிய வணிகக் கனவை அடைவதற்கு இந்தக் காலகட்டம் முழுவதும் கொமர்ஷல் வங்கி நிறைய ஆதரவை வழங்கியுள்ளது. மேலும், இலங்கைக்கு சொந்தமான சர்வதேச வர்த்தக நாமமாக மாறுவதற்கான இறுதி இலக்கை அடைவதற்கு அவர்களின் அதிகபட்ச ஆதரவை தொடர்ந்து பெற விரும்புகிறோம்.

 

06) எதிர்கால தொழில்முனைவோருக்கு நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்?

உங்களுக்கு எதில் ஆர்வமோ அதனைப் பின்பற்றுங்கள். கடினமான காலங்களிலும் உங்கள் ஆசை அல்லது கனவைப் பற்றி சிந்தியுங்கள். விளம்பரத்தை விட தயாரிப்புகளில் கவனம் செலுத்துங்கள், செலவு செய்வதில் சிக்கனமாக இருங்கள் மற்றும் எதனையும் செய்து பார்ப்பதற்கு தயாராக இருங்கள்.

 

Disclaimer: This article is based solely on the inputs shared by the featured member. GlobalLinker does not necessarily endorse the views, opinions & facts stated by the member.

Comments