82 வாரத்திற்கு முன்பு — 4 நிமிடம் படிக்க
நிறுவனம்: Gaffoor & Sons (Pvt) Ltd | Savings Supermarket
தொழில்: சுப்பர்மார்க்கட்
இதுநிறுவப்பட்டஆண்டு: 2000,2021
இடம்: காத்தான்குடி, மட்டக்களப்பு
போதுமான அளவு விலைக்கழிவுகள் கிடைக்கும் சுப்பர் மார்க்கட் பற்றி உங்களுக்கு தெரியுமா? வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமான அளவுக்கு சேமிப்பொன்று கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்டதுதான் மட்டக்களப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள Savings Supermarket. அதைப் பற்றி இன்று உரையாடுவோம்.
01) உங்கள் வணிகத்தின் தொடக்கத்தைப் பற்றி நாங்கள் முதலில் பேசுவோம் அல்லவா?
எங்கள் வணிகத்தின் தொடக்கத்தைப் பற்றி பேசுவது என்றால், எங்கள் வணிகம் முதலில் தொடங்கியது சாதாரண சில்லறை கடையாகவே. 2000 ஆம் ஆண்டு அவ்வாறு தொடங்கப்பட்ட எங்கள் வணிகம் 2021 இல் “Savings Supermarket” என்ற பெயரில் குறிப்பிடப்பட வேண்டிய புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கத்திற்குப் உட்பட்ட ஒரு சுப்பர் மார்க்கட் ஆக மாற்றப்பட்டது. இன்று நமது நுகர்வோர்களுக்கு முன்னோடியாக பரந்த அளவிலான புதிய தயாரிப்புகள், பால் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிலையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இது போன்ற எங்கள் நோக்கத்திற்காக வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமான அளவுக்கு சேமிப்புகள் வழங்கப்படுகின்றன.
02) உங்கள் வணிகம் ஏனைய போட்டி வணிகங்களில் எவ்வாறு வேறுகின்றது?
பல்வேறு உணவுகள், பானங்கள் மற்றும் வீடுகள் தயாரிப்புகள், பகுதிகளாக ஒரு நிறுவனத்தில் உள்ளன. மேலும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிரியமான மற்றும் எளிதான சொப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கு மற்றும் டிஜிட்டல் கூப்பன்கள் மற்றும் பரிசு திட்டங்களை வழங்குவதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விற்பனைத் திட்டங்கள் எம்மிடம் உள்ளன.
03) நீங்கள் இந்த பயணத்தில் முகங் கொடுத்த மற்றும் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
நாங்கள் அன்று தொடக்கம் எதிர்பார்க்கும் ஒரு விடயம் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலைக்கு தயாரிப்புகளை வழங்கி போதுமான அளவிற்கு கழிவுகளை வழங்குவதே. ஆனால் தற்போது நாம் முகங் கொடுக்கும் பிரச்சினைகளான எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தொடர்ந்து கழிவுகளை வழங்கி செயல்படுவது எங்களுக்கு சிரமமாக உள்ளது.
04) உங்கள் எதிர்கால வணிகக் பற்றி பேசுவோமா?
Savings Supermarket எங்கள் கனவு என்பது சிறந்த நுகர்வோர் சேவையுடன் வாடிக்கையாளரின் நன்மதிப்பை அதிகரித்து சந்தையில் முன்னணியாளராக திகழந்து, நாடு முழுவதும் பல கிளைகளை திறப்பது ஆகும்.
05) உங்கள் இந்த பயணத்திற்கு கொமர்ஷல் வங்கியிடம் இருந்து கிடைத்த ஆதரவு எவ்வாறானது?
நமது வெற்றிகரமான பயணத்தில் கொமர்ஷல் வங்கி மிக முக்கியமான பங்களிப்பை செய்ததை நாங்கள் மிகவும் பெருமையாக கூறுகின்றோம். வங்கிக் குழு மற்றும் அவற்றுடன் உள்ள பிணைப்பு எங்களுக்கு எப்போதும் இருப்பதாக உணர்கிறேன். நிதியுதவி மற்றும் ஆலோசனைகள் தேவைப்படும் சகல நேரங்களிலும் அவர்கள் உடன் இருந்தனர். 24 மணிநேரம் முழுவதும் அணுகக்கூடிய வங்கி அமைப்பு மற்றும் தானியங்கி டெலர் இயந்திரங்கள் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் வங்கி நேரத்துக்குப் பிறகும் கூட எங்கள் வணிகம் செய்ய உதவுகின்றது. நட்புறவுமிக்க வங்கியாக அவர்களின் சேவையை நாங்கள் மதிக்கின்றோம்.
06) எதிர்கால தொழில்முனைவோருக்கு உங்களிடமிருந்து கிடைக்கும் அறிவுரைகள் என்ன?
நீங்கள் சௌகரியமாக இருக்க விரும்பினால், மாற்றத்தினையும், வித்தியாசமான விடயங்களைச் செய்யவும் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் ஒருபோதும் பிரகாசிக்க மாட்டீர்கள்.
இந்த வாரம் அதிகம் படித்தது
கற்றல் & மேம்பாடு 7 வாரத்திற்கு முன்பு
டிரெண்டிங்
Get more sales leads with an online business profile
GlobalLinker Assist 152 வாரத்திற்கு முன்பு
How to Process and Ship Orders on Your Linker.store
Ecommerce 138 வாரத்திற்கு முன்பு
கருத்துகள்
இந்த உள்ளடக்கத்தைப் பகிரவும்
தயவு செய்து உள்நுழைய அல்லது பதிவு விவாதத்தில் சேர