புதிய வணிகச் சூழலை மதிப்பிடுதல்

புதிய வணிகச் சூழலை மதிப்பிடுதல்

கற்றல் & மேம்பாடு

Commercial Bank LEAP Team

Commercial Bank LEAP Team

49 வாரத்திற்கு முன்பு — 2 நிமிடம் படிக்க

உங்களின் புதிய வணிகச் சூழலை மதிப்பிடுவதற்கான எங்கள் IFC பயிற்சி வீடியோவிற்கு வரவேற்கிறோம்! இந்த வீடியோவில், உங்களின் புதிய முயற்சிக்கான SWOT பகுப்பாய்வை மேற்கொள்ளும்போது, நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிப்போம்.

 

உலக வங்கி குழுமத்தில் அங்கம் வகிக்கும் IFC நிறுவனம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்காக கொமர்ஷல் வங்கியுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகிறது. நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான, கொமர்ஷல் வங்கியானது பொருளாதார வளர்ச்சியை உந்துதல் மற்றும் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

இந்த புதிய சூழலில் நிலைத்திருப்பது சவாலானதாக இருக்கலாம், ஆனால் சரியான மனநிலை மற்றும் உபாயங்கள் மூலம், நீங்கள் வெற்றிக்கான பாதையில் செல்லலாம். உங்கள் வணிகச் சூழலை மதிப்பிடுதல், பலம், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டறிதல் (SWOT பகுப்பாய்வு) மற்றும் இறுதியில் உங்கள் புதிய முயற்சிக்கான நேர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் நீங்கள் வெற்றி கொள்ளலாம்.

 

எந்தவொரு தொழில்முனைவோருக்கும் நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. உத்வேகத்துடன் இருக்கவும், தடைகளை கடக்கவும், சவால்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றவும் உதவும் சில குறிப்புகள் மற்றும் நுட்பங்களைப் இவ் வீடியோவூடாக பகிர்ந்து கொள்கிறோம். நேர்மறையான மனநிலையானது சிறந்த முடிவுகளை எடுக்க உங்களுக்கு அதிகாரம் வழங்குவது மட்டுமல்லாமல், உங்கள் வணிகத்தின் வெற்றிக்கு பங்களிக்கக்கூடிய ஒத்த எண்ணம் கொண்ட நபர்களையும் ஈர்க்கும்.

 

நீங்கள் ஒரு புதிய தொழில்முனைவோராக இருந்தாலும் அல்லது புதிய சந்தைகளை விரிவுபடுத்த விரும்பும் அனுபவம் வாய்ந்த வணிக உரிமையாளராக இருந்தாலும், உங்கள் புதிய வணிகச் சூழலை திறம்பட மதிப்பிடுவதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை உங்களுக்கு வழங்குவதற்காக இந்தப் பயிற்சி வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Disclaimer: The views and opinions expressed in this article are those of the author and do not necessarily reflect the views, official policy or position of GlobalLinker.

கருத்துகள்

Commercial Bank இன் சுயவிவரத்தை காண்க

Commercial Bank LEAP Team எழுதப்பட்ட பிற கட்டுரைகள்

Calling of Registrations to meet Exporters under Diribala Exporter Development...

29 வாரத்திற்கு முன்பு

Economic Overview: January 2024

31 வாரத்திற்கு முன்பு

Economic Overview: December 2023

36 வாரத்திற்கு முன்பு

அனைத்தையும் காட்டு

இந்த வாரம் அதிகம் படித்தது