90 வாரத்திற்கு முன்பு — 4 நிமிடம் படிக்க
உலகம் பல்வேறு விஷயங்களால் காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதனால் சிறுவயதில் நாம் அனுபவித்த பல விடயங்கள் இன்று மாறிவிட்டன. ஆனால் வெற்றிகரமாக வாழ்வதற்கு, மாறிவரும் இந்த உலகத்துடன் நாம் மாற வேண்டும். வணிக உலகிற்கும் இது பொருந்தும்.
முதலில் பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்தோம், பிறகு பணம் கொடுத்து பொருட்களை வாங்கும் நிலைக்கு மாறினோம். ஆனால் நாம் இன்று இன்னும் மேம்பட்ட மற்றும் வேறுபட்ட வணிக உலகில் வாழ்கிறோம். எனவே, வணிக உலகில் ஜாம்பவான்களாக மாற, காலத்திற்கு ஏற்றவாறு நமது வணிகத்தை மாற்ற வேண்டும். ஏனெனில் காலத்துக்கு ஏற்றவாறு மாறாத அல்லது மாற்றியமைக்காத பல தொழில்கள் இன்று உலகில் இருந்து மறைந்துவிட்டன.
இன்றைய போட்டி மற்றும் எப்போதும் மாறிவரும் வணிக உலகில் வாழ டிஜிட்டல் மாற்றம் சிறந்த மாற்றமாகும்.
டிஜிட்டல் மாற்றம் என்பது ஒரு வணிகத்தின் அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, அந்தத் துறைகள் வழங்கும் சேவைகளுக்கு வேறு முகத்தைச் சேர்ப்பதாகும். இது அந்த சேவைகளுக்கு மதிப்பு சேர்க்கிறது மற்றும் மனநிலையிலும் ஒரு புது மாற்றத்தை கொண்டுவருகிறது.
சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு இந்த டிஜிட்டல் மாற்றம் தேவை என்பதற்கான சில காரணங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பேசுவோம்.
உங்கள் சிறிய மற்றும் நடுத்தர வணிகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைச் சேர்ப்பது பெரிய நிறுவனங்களுக்கு எதிராகப் போட்டியிட பல வாய்ப்புகளைத் திறக்கிறது. சிறிய வணிகங்களுக்கு டிஜிட்டல் முறைக்கு செல்வது மிகவும் எளிதானது, ஏனெனில் பெரிய வணிகங்களை விட குறைவான பணியாளர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. மேலும், அவர்கள் அனுபவத்தைப் பெறுவது மற்றும் தேவையான இடங்களில் மாற்றங்களைச் செய்வது எளிது, செலவும் மிகக் குறைவு. எனவே தொழில்நுட்பத்துடன் உங்களுக்கு முன்னால் இருக்கும் பெரிய வணிகங்களை விட தொழில்நுட்பத்தில் முன்னோக்கி இருங்கள்.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் பெரிய அளவிலான தரவுகளை சேகரிக்க முடியும், எனவே அவர்கள் முடிவுகளை எடுக்க தேவையான தகவல்களை எளிதாக அணுக முடியும். பெறப்பட்ட தகவல்களில் குறைந்தபட்ச பிழைகள் காரணமாக, வணிகத்தின் செயல்திறன் அதிகரிக்கிறது மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளின் துல்லியம் அதிகரிக்கிறது. உற்பத்தி, சில்லறை விற்பனை மற்றும் சுகாதாரத் துறைகளில் உள்ள வணிகங்களுக்கு, வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை முன்கூட்டியே தீர்க்கவும், சேவையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிவிக்கவும் இந்தத் தகவல் பயன்படுத்தப்படலாம்.
செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்கள் நேரத்தைச் செலவழிக்கும் பணிகளைத் தானியக்கமாக்கி, பணியாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. எனவே, வணிகம் வளரவும், வருமானத்தை அதிகரிக்கவும், இயக்கச் செலவுகளைக் குறைக்கவும் உதவும் உத்திகளை அவர்களால் தேடவும் பரிசோதனை செய்யவும் முடிகிறது. மேலும் அவர்கள் தங்கள் வேலையுடன் மட்டுப்படுத்தாமல், வணிகத்தின் ஏனைய அம்சங்களைப் பற்றியும் அறிந்துக் கொள்ள முடிகிறது.
தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் உதவுகிறது. பல வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து பொருட்களை ஒன்லைனில் வாங்குவதற்கான வழிகளைத் தேடுகிறார்கள், எனவே அவர்கள் உங்கள் வணிகத்தில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், அவர்களின் கருத்துக்களை ஒன்லைனில் பெறுவது எளிது, எனவே அவர்களைத் தக்கவைக்க நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யலாம்.
எனவே உங்கள் வணிகத்திற்கும் டிஜிட்டல்மயமாக்கல் எவ்வாறு உதவுகிறது என்பதைக் கண்டறியவும் மேலும் அதிக இலாபத்தைப் பெற உங்கள் வணிகத்தை டிஜிட்டல்மயமாக்கவும்.
Image source: Freepik
பதிவிட்டவர்
GlobalLinker StaffWe are a team of experienced industry professionals committed to sharing our knowledge and skills with small & medium enterprises.
Step by Step Process of Creating a Digital Catalogue for Your Business
20 வாரத்திற்கு முன்பு
Importance of World Environment to Small & Medium Enterprises (SMEs)
28 வாரத்திற்கு முன்பு
Declutter Your Business the Marie Kondo Way
32 வாரத்திற்கு முன்பு
இந்த வாரம் அதிகம் படித்தது
டிரெண்டிங்
Get more sales leads with an online business profile
GlobalLinker Assist 136 வாரத்திற்கு முன்பு
கருத்துகள்
தயவு செய்து உள்நுழைய அல்லது பதிவு விவாதத்தில் சேர