விற்பனை புனல் கசிவுகளை சரிசெய்யக் கூடிய 3 எளிய வழிகள்

விற்பனை புனல் கசிவுகளை சரிசெய்யக் கூடிய 3 எளிய வழிகள்

வணிக மேம்பாடு

GlobalLinker Staff

GlobalLinker Staff

90 வாரத்திற்கு முன்பு — 5 நிமிடம் படிக்க

விற்பனை புனல் அல்லது மாற்றும் புனல் என்பது ஒரு வாடிக்கையாளர்ஃவாங்குபவர் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்வதிலிருந்து இறுதியாக ஒன்லைனில் கொள்வனவு செயல்முறையாகும்.

 

முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, விற்பனை புனலின் படிகள் பின்வருமாறு:

1. விழிப்புணர்வ (awareness)

2. ஆர்வம் (Interest)

3. பரிசீலனை செய்தல்(Consideration)

4. நோக்கம் (Intent)

5. மதிப்பீடு(Evaluation)

6. கொள்வனவு((Purchase)

 

இவற்றில், சந்தையாளர்கள் மற்றும் விற்பனை ஆய்வாளர்கள் மூன்று முக்கிய படிகளைக் கருதுகின்றனர்: விழிப்புணர்வு, பரிசீலனை மற்றும் கொள்வனவு. நீங்கள் இங்கு உருவாக்கிய விற்பனை புனல் பலவீனமாக இருந்தால், ஒருவேளை நீங்கள் கசிவைக் காணலாம். ஆரம்ப கட்டங்களில் காரணங்களை கவனிக்கவில்லை என்றால், நீண்ட காலத்திற்கு அதை சரிசெய்வது கடினம்.

 

உங்கள் விற்பனை புனல் கசிந்தால் உங்களுக்கு எப்படி தெரியும்? ஒரு சிறு வணிக உரிமையாளராக, உங்கள் விற்பனைப் புனல் பற்றிய படிப்படியான அறிக்கையைப் பெற, இலவச கருவியான Google Analytics ஐ பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தக்கூடிய மூன்று புனல் தொடர்பான அறிக்கைகளை Google Analytics கொண்டுள்ளது

 

1. புனல் காட்சிப்படுத்தல் அறிக்கை (Funnel visualization report) - உங்கள் புனல் பற்றிய கண்ணோட்டத்தை வழங்கும் அடிப்படை அறிக்கை.

2. இலக்கு ஓட்ட அறிக்கை (Goal flow report) - அடிப்படை அறிக்கையை விட சற்று சிக்கலானது மற்றும் திகதி ஒப்பீடுகள் போன்ற விருப்பங்களைப் பயன்படுத்த இது உங்களை அனுமதிக்கிறது.

3. எதிர்புறமாக இலக்கு நோக்கிய அறிக்கை – (Reverse goal path report): புனல் மூலம் மாற்றுவதற்கு முன் வாடிக்கையாளர்கள் பார்வையிட்ட பக்கங்களை நீங்கள் பார்க்கலாம்.

கசிவுகளுக்கு உங்கள் விற்பனை புனலை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். இப்போது நீங்கள் அந்த கசிவுகளை சரிசெய்யக் கூடிய  மூன்று எளிய வழிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

 

1. மேல் நிலை கசிவுக்கான தீர்வுகள்

உங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றி உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிலைதான் முதன்மையான நிலை. இந்த கட்டத்தில் கசிவு ஏற்பட்டால், நீங்கள் இன்னும் சரியான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியவில்லை என்பதே இதன் பொருள். சரியான வாடிக்கையாளர்களை ஈர்க்க, நீங்கள் சரியான சந்தைப்படுத்தல்/விளம்பர உத்தியை தயார் செய்ய வேண்டும்.

உங்கள் ஆற்றல் மற்றும் பணத்தை சரியான வாடிக்கையாளர்களுக்காக அர்ப்பணிக்கிறீர்களா என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம். தவறான வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பது உங்கள் நேரத்தையும் சக்தியையும் பணத்தையும் வீணடிக்கும். இந்த கசிவை அகற்ற உங்கள் இணையதளம், இறங்கும் பக்கம், சமூக ஊடக விளம்பரம் மற்றும் வாடிக்கையாளர் விழிப்புணர்வுக்கான பிற முறைகளை முயற்சிக்கவும். உங்கள் விளம்பரத்தில் தெளிவான செயற்பாட்டினை(Call To Action )  சேர்க்க வேண்டும். அதாவது, வாடிக்கையாளர் உங்கள் இணையதளத்திற்குச் செல்ல வேண்டுமா அல்லது நீங்கள் வழங்கும் இலக்கம் ஊடாக உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமா என்பது.

 

2. நடு நிலை கசிவுக்கான தீர்வுகள்

நடுத்தர நிலை அல்லது பரிசீலனை நிலை என்பது வாடிக்கையாளர் உங்கள் தயாரிப்புகளை வாங்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யும் போது. இந்த கட்டத்தில் ஒருமுறை, வாடிக்கையாளரை விற்பனை வாய்ப்பாக மாற்றுவது அடுத்த படியாகும்.

 

அந்த படிகள் சரியாக இருக்க, இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டும்:

• வாடிக்கையாளர்களை அவர்களின் கொள்வனவு முறைகளுக்கு ஏற்ப குழுவாக்கவும்.

• ஒவ்வொரு வாடிக்கையாளர் பிரிவிற்கும் பொருத்தமான பிரச்சாரம் ஒன்றை ஒழுங்குப்படுத்தவும்.

• பல்வேறு ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்யவும்

 

வாடிக்கையாளர் உறவு முகாமையில் (CRM) முதலீடு செய்யலாம். அனைத்து ஊடகங்களிலிருந்தும் (மின்னஞ்சல் பட்டியல்கள், உங்கள் இணையதளம் அல்லது பிற ஆதாரங்கள்) அனைத்து வாடிக்கையாளர் விற்பனை வாய்ப்புகளையும் கண்காணிக்கவும், அதனுடன் ஈடுபடவும் இது உங்களை அனுமதிக்கிறது.

3. கீழ்நிலை கசிவுக்கான தீர்வுகள்

புனலின் அடிப்பகுதி அல்லது மாற்றும் நிலை மிகவும் முக்கியமான கட்டமாகும். இந்த கட்டத்தில், வாடிக்கையாளர் உங்களிடமிருந்து ஒரு பொருளை வாங்க விரும்பினால், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான கொள்வனவு அனுபவத்தை வழங்க வேண்டும். அதாவது, சில சந்தர்ப்பங்களில், வாங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்க வேண்டியிருந்தால், அதைச் சரியாகச் செய்ய முடியாவிட்டால், வாடிக்கையாளர் மீண்டும் போய்விடுவார். மேலும், கட்டணம் செலுத்துவது அல்லது உங்கள் இணையதளம் அவர்கள் தேடும் வழியில் எளிதாக  இல்லை என்றால், அவர்களுக்கு விற்கும் வாய்ப்பு கிடைக்காது. எனவே இந்த கட்டத்தில் இதுபோன்ற கசிவுகளைத் தவிர்க்க, வாடிக்கையாளர்களுடனேயே இருந்து, கடினமான பகுதிகளில் அவர்களை வழிநடத்துங்கள்.

மேலும் இது இத்துடன் முடிவடையவில்லை. புனலின் ஒவ்வொரு கட்டத்திற்கும், கசிவுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த நீங்கள் பல சோதனைகளைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர்களுக்கு முன்பாக உங்கள் இணையதளத்தைச் பரிசோதிக்கவும், CTAகள், விளம்பர சேனல்கள் போன்ற பலவற்றையும் பரிசீலிக்கவும்.

 

Image source: Shutterstock

கருத்துகள்

பதிவிட்டவர்

GlobalLinker Staff

We are a team of experienced industry professionals committed to sharing our knowledge and skills with small & medium enterprises.

GlobalLinker இன் சுயவிவரத்தை காண்க

GlobalLinker Staff எழுதப்பட்ட பிற கட்டுரைகள்

Step by Step Process of Creating a Digital Catalogue for Your Business

20 வாரத்திற்கு முன்பு

Importance of World Environment to Small & Medium Enterprises (SMEs)

28 வாரத்திற்கு முன்பு

Declutter Your Business the Marie Kondo Way

32 வாரத்திற்கு முன்பு

அனைத்தையும் காட்டு

இந்த வாரம் அதிகம் படித்தது