விலை நிர்ணய மூலோபாயங்கள்

விலை நிர்ணய மூலோபாயங்கள்

கற்றல் & மேம்பாடு

Commercial Bank LEAP Team

Commercial Bank LEAP Team

49 வாரத்திற்கு முன்பு — 2 நிமிடம் படிக்க

இந்த சவாலான சூழ்நிலையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நிர்ணயத்தை எவ்வாறு திறம்பட மேற்கொள்வது என்பது பற்றிய எங்கள் IFC பயிற்சி வீடியோவிற்கு வரவேற்கிறோம். இன்றைய வேகமாக மாறிவரும் வணிகச் சூழலில் போட்டித்தன்மையுடன் இருக்கவும் இலாபத்தை நிலை நிறுத்தவும் நிறுவனங்கள் தங்கள் விலை நிர்ணய மூலோபாயங்களை மாற்றியமைத்து மேம்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

 

உலக வங்கி குழுமத்தில் அங்கம் வகிக்கும் IFC நிறுவனம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்காக கொமர்ஷல் வங்கியுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகிறது. நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான, கொமர்ஷல் வங்கியானது பொருளாதார வளர்ச்சியை உந்துதல் மற்றும் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

இவ் வீடியோவானது, விலை மாற்றங்களை நிர்வகிப்பதற்கான அத்தியாவசிய வழிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் பற்றிய வழிகாட்டலை உங்களுக்கு வழங்கும். மேலும், சந்தை இயக்கவியலைப் புரிந்துகொள்வது, வாடிக்கையாளர்களின் நடத்தையை பகுப்பாய்வு செய்தல் மற்றும் அறிவார்ந்த முடிவுகளை எடுக்க தரவு சார்ந்த நுண்ணறிவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கும்.

 

நீங்கள் ஒரு வணிக உரிமையாளராகவோ, மேலாளராகவோ அல்லது விலை நிர்ணயம் செய்யும் நிபுணராக இருந்தாலும், சவாலான காலங்களில் விலை நிர்ணயம் செய்வதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க தேவையான அறிவு மற்றும் திறன்களை இந்தப் பயிற்சி வீடியோ உங்களுக்கு வழங்கும்.

 

செலவு, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நிர்ணயம், பொருளாதார நிலை, தேவை, வாடிக்கையாளர், வருமானம் மற்றும் செலவு ஆகியவற்றின் நுணுக்கங்களை அவிழ்க்கும் இந்த அறிவூட்டும் பயிற்சி வீடியோவுடன் இணைந்து, நமது பொருளாதாரத்தை வடிவமைக்கும் சக்திகள் பற்றிய நுண்ணறிவை பெறுவதன் மூலம் நுகர்வோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் அறிவார்ந்த முடிவுகளை மேற்கொள்ள முடியும். மாறிவரும் இன்றைய பொருளாதார சூழலில் உங்கள் அறிவை விரிவுபடுத்தி முன்னேற இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்.

 

Disclaimer: The views and opinions expressed in this article are those of the author and do not necessarily reflect the views, official policy or position of GlobalLinker.

 

கருத்துகள்

Commercial Bank இன் சுயவிவரத்தை காண்க

Commercial Bank LEAP Team எழுதப்பட்ட பிற கட்டுரைகள்

Calling of Registrations to meet Exporters under Diribala Exporter Development...

29 வாரத்திற்கு முன்பு

Economic Overview: January 2024

31 வாரத்திற்கு முன்பு

Economic Overview: December 2023

36 வாரத்திற்கு முன்பு

அனைத்தையும் காட்டு

இந்த வாரம் அதிகம் படித்தது