கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் அறுவடை செய்யப்பட்ட வெற்றிக் கனி Asia Commercial Fertilizer (Pvt) Ltd

கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் அறுவடை செய்யப்பட்ட வெற்றிக் கனி Asia Commercial Fertilizer (Pvt) Ltd

SME இன்ஸ்பிரேஷன்ஸ்

GlobalLinker Staff

GlobalLinker Staff

90 வாரத்திற்கு முன்பு — 5 நிமிடம் படிக்க

Enterprise: Asia Commercial Fertilizer (Pvt) Ltd

Founder: எம்.எல்.எம்.தாசிம்      

Industry: விவசாய இரசாயனங்கள் இறக்குமதி மற்றும்

Year it was founded: 2003

Location: கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பகுதி

 

புதிதாக ஒரு வியாபாரத்தினை தொடங்குவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் அந்த வணிகம் உங்கள் இதயத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு கனவாக இருந்தால், அந்த கனவை அடைய நீங்கள் நிச்சயமாக ஒரு வழியைக் கண்டறிவீர்கள். அவ்வாறு தான் கனவு கண்ட அதே இலக்குடன் தனது வியாபாரத்தினை வெற்றிப் படிக்கட்டுக்கு உயர்த்திவர்தான் Asia Commercial Fertilizer (Pvt) Ltd  மற்றும் Grand Crop Care Solutions (Pvt) Ltd ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் எம்.எல்.எம்.தாசிம் அவர்கள். கனிம உரத் தொழிலில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள அவர், தனது வியாபாரத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றதுடன், இலங்கையின் முதல் ஐந்து உரம் இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக தனது வர்த்தகத்தை நிலைநாட்டியுள்ளார்.

 

எனவே அவரது வெற்றிகரமான பயணத்தின் சுவாரசியமான பகுதிகள் பற்றிய கதை இது

 

1. முதலில்உங்கள்வியாபாரம்எப்படிப்பட்டவியாபாரம்என்பதைப்பற்றிபேசுவோம்? மேலும்இந்தத்துறைக்குஎப்படிவந்தீர்கள்?

ஆம், நான் முதலில் உரம் இறக்குமதி மற்றும் விநியோகஸ்தராக எனது பயணத்தைத் தொடங்கினேன். அதற்கு என் தந்தையிடமிருந்து முதல் ஆதரவு கிடைத்தது. நான் 2003 இல் Asia Commercial Fertilizer (Pvt) Ltd ஐ தொடங்கினேன். இன்று Grand Crop Care Solutions (Pvt) Ltd என்ற பெயரில் எங்கள் வணிகத்தில் விவசாய இரசாயனங்கள் இறக்குமதி மற்றும் விநியோகம் மூலம் எங்கள் வணிகத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளோம். எங்கள் வணிகம் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பகுதியில் நடாத்தப்படுகிறது. எங்கள் வணிகக் குழுவின் அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்பின் விளைவாக இன்று நாங்கள் இவ்வுயரத்திற்கு வளர்ந்துள்ளோம்.

 

2. இந்தத்துறையில்உள்ளமற்றவணிகங்களில்இருந்துஉங்கள்வணிகம்எவ்வாறுவேறுபடுகிறது?

நான் பார்ப்பது போல், எங்கள் வணிகத்தில் உள்ள வித்தியாசம் எங்கள் தயாரிப்புகளின் உயர்ந்த தரம் மற்றும் சிறந்த செயற்பாடு. ஏனென்றால், எங்கள் வணிகத்தில் அடி முதல் நுனி வரை நாங்கள் நம்பும் ஒன்று, வாடிக்கையாளருக்கு உயர்தரமான தயாரிப்புகளை மட்டும் வழங்குவதாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப அனைத்து வகையான தயாரிப்புகளையும் பெறக் கூடியவாறான வசதிகளை நாங்கள் வழங்குகிறோம். அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை மிக விரைவாக விநியோகிப்பதிலும் நாங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளோம்.

 

3. வியாபாரத்தின்தொடக்கத்தில்நீங்கள்சவால்களைஎதிர்கொண்டிருப்பீர்கள். அதனைப்பற்றிபேசுவதும்சிறப்பாகஇருக்கும்அல்லவா?

கண்டிப்பாக. எந்தவொரு வணிகத்தின் தொடக்கத்திலும், நீங்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடும். நான் எதிர்கொண்ட முக்கிய சவால் போட்டி. ஏனென்றால், புதிய தொழில்நுட்பத்துடன் சந்தையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த ஜாம்பவான்களுடன் நான் போட்டியிட வேண்டியிருந்தது. அதன் பிறகு இன்று வரை பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. சமீபகாலமாக, அரசு விதித்துள்ள இறக்குமதி வரம்பும், நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையும் எங்களை பாதித்துள்ளது. மேலும், உலக சந்தையில் உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. ஆனாலும் இந்த சவால்களை நாம் தொடர்ந்தும் வெற்றிக்கொண்டு முன்னோக்கிச் செல்வோம் .

 

4. நீங்கள்கொமர்ஷல்வங்கியுடன்கொடுக்கல்வாங்கல்களைமேற்கொள்கிறீர்கள். உங்கள்வணிகபயணத்திற்குகொமர்ஷல்வங்கியிடமிருந்துஎப்படியானதோர்ஆதரவுகிடைக்கின்றது?

எனது வணிகத்தின் தொடக்கத்தில் இருந்தே கொமர்ஷல் வங்கி என்னுடன் உள்ளது. அவர்கள் எனது வியாபாரத்தினை தங்களது சொந்த வியாபாரமாக கருதி எனக்கு நிறைய ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்கினர். அதனால் அன்று முதல் இன்று வரை எனக்கும் எனது வணிகத்திற்கும் அவர்கள் செய்த சேவைகள் மிக அதிகம். அவர்களின் ஆதரவுடன் நாங்கள் எங்கள் இலக்குகளை அடைந்தோம். இப்போது கொமர்ஷல் வங்கி எங்கள் சொந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக  உள்ளனர். அவர்கள் அந்தளவிற்கு மிகவும் நட்பாக உள்ளனர்.

 

5. உங்கள்கனவுஇப்போதுநனவாகிவிட்டதா? அல்லதுஉங்களுக்குவேறுபெரியகனவுகள்ஏதும்இருக்கின்றனவா?

நான் எப்போதும் கனவு காண்பவன். அந்த கனவுகளை நனவாக்க உழைப்பவன். எனவே இப்போது இலங்கையின் உர உற்பத்தி மற்றும் வர்த்தக நிறுவனத்தில் சந்தைத் தலைவராக திகழ வேண்டும் என்பதே எனது கனவு.

 

6. வியாபாரம்ஒன்றினைஆரம்பிக்கவேண்டும்என்றுகனவுகாணும்தலைமுறைக்குநீங்கள்கூறவிரும்பும்அறிவுரைஎன்ன?

ஆம், ஒரு எச்சரிக்கையாக இல்லை, ஆனால் எனது அனுபவத்தின் அடிப்படையில் சில ஆலோசனைகளை வழங்குகிறேன். முதலில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய தொகையைக் கண்டறிந்து அதற்கேற்ப நீங்கள் விரும்பும் வணிகத்திற்கான திட்டத்தை உருவாக்கவும். மேலும் வளங்களின் அடிப்படையில் நீங்கள் தயாராக இருந்தால் மட்டுமே வணிகத்தை விரிவுபடுத்த வேண்டும். நீங்கள் கடன் வாங்கினால், அந்த கடன் தொகை உங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள், அந்தத் தொகையை நீங்கள் திட்டமிட்ட செயலுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். முறையான வணிக முகாமைத்துவம் மற்றும் முறையான நிதி நிர்வாகம் பராமரிக்கப்பட வேண்டும்.

எனவே, அவர் வணிக உலகில் மேலும் உயர்ந்து மற்ற அனைவரையும் விட பிரகாசிக்க வேண்டும் என்று நாங்கள் வாழ்த்துகிறோம், இது போன்று மற்றொரு வெற்றிகரமான வணிகக் கனவைத் தேடி ஆராய்வோம்.

 

Disclaimer: This article is based solely on the inputs shared by the featured member. GlobalLinker does not necessarily endorse the views, opinions & facts stated by the member.

கருத்துகள்

இந்த உள்ளடக்கத்தைப் பகிரவும்

பதிவிட்டவர்

GlobalLinker Staff

We are a team of experienced industry professionals committed to sharing our knowledge and skills with small & medium enterprises.

GlobalLinker இன் சுயவிவரத்தை காண்க