சவால்களே சவால் விடுத்த வெற்றிக் கதை: Southern House Enterprises

சவால்களே சவால் விடுத்த வெற்றிக் கதை: Southern House Enterprises

SME இன்ஸ்பிரேஷன்ஸ்

GlobalLinker Staff

GlobalLinker Staff

78 வாரத்திற்கு முன்பு — 5 நிமிடம் படிக்க

Enterprise: Southern House Enterprises

Founder: M.W.P.M.N நாணயக்கார

Industry: உலர் மோட்டார் உற்பத்தி    

Year it was founded:2010

 

ஒரு வணிகத்தைப் பற்றி நாம் நினைக்கும் போது, எங்கள் அனைவருக்கும்; உடனடியாக நினைவுக்கு வருவது ஒரு குறிபிட்ட சில துறைகளில் இருந்து தோன்றிய வணிகங்கள் மட்டுமே. ஆனால் நாம் அறியாத பல துறைகளில் இருந்து வெளிவந்து வெற்றி பெற்ற பல தொழில் நிறுவனங்களும் தொழிலதிபர்களும் நம் நாட்டில் உள்ளனர். எனவே இன்று நாம் பேசுவது பலருக்குத் தெரியாத ஒரு துறையில் மிகவும் வெற்றிகரமாக திகழும் ஒருவருடன். அவர் M.W.P.M.N நாணயக்கார.

 

எனவே அவரது வணிகம் மற்றும் அவரது வெற்றிகரமான பயணம் பற்றி அவருடன் பேசலாம்.

 

1. முதலில்உங்கள்வணிகத்தைப்பற்றிபேசுவோம்அல்லவா?

2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சதர்ன் ஹவுஸ் என்டர்பிரைசஸ், CEMENTO வர்த்தக நாமத்தின் கீழ் உலர் மோட்டார் உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். எங்கள் வணிகம் முக்கியமாக டைல் அடிப்படையிலான உலர் மோட்டார் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது.

 

2. உங்கள்வணிகவெற்றிக்குஉதவியசிறப்புக்காரணங்கள்ஏதேனும்உள்ளதா?

கண்டிப்பாக. எங்கள் வணிகத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன மற்றும் ஏனைய போட்டி வணிகங்களில் இருந்து எங்கள் வணிகம் தனித்துவமானது. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மட்டுமே வழங்குகிறோம். மேலதிகமாக, எங்கள் டைல் செய்பவர்களின் அறிவு மற்றும் பயிற்சியை மேம்படுத்தும் திட்டங்களை நாங்கள் நடத்துகிறோம், இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க கூடிய் மிகவும் அறிவார்ந்த ஊழியர்கள் எங்களிடம் உள்ளனர். எனவே அதுவே எங்களின் தனித்துவம் என நம்புகிறோம்.

 

3. உங்கள்வணிகத்தைவெற்றிக்குகொண்டுசெல்லும்பயணத்தில்எதிர்கொள்ளும்சவால்கள்என்ன?

ஒரு தொழிலை நடத்துவது என்பது சவால்களை எதிர்கொள்வது என்று நான் நினைக்கிறேன். வணிகத்தின் ஆரம்ப கட்டங்களில் நாங்கள் எதிர்கொண்ட முக்கிய சவால்களில் ஒன்று வாடிக்கையாளர்களை ஈர்ப்பதும் தக்கவைப்பதும் ஆகும். அதற்காக இலக்கு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களைக் கண்டறிந்து, அவர்களைச் சென்றடைய பொருத்தமான சந்தைப்படுத்தல் உத்திகளைப் பயன்படுத்தினோம்.

 

நாம் எதிர்கொள்ளும் மற்றொரு சவால், அரசாங்க விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் குறித்து தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பது நல்லது. ஏனென்றால், அவற்றைப் பற்றித் தெரியாமல் இருப்பதால், வணிகம் பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.

 

4. உங்கள்வணிகத்தைப்பற்றிநீங்கள்கனவுகண்டதைப்பற்றிபேசுவோம், இல்லையா?

ஒரு நிலையான வணிக மாதிரியைப் பராமரிக்கும் அதே வேளையில், எங்கள் வியாபாரக்குறி மற்றும் வணிகத்தை சர்வதேச சந்தைக்கு கொண்டு வருவதே எனது கனவு.

 

5. உங்கள்வணிகத்தின்வெற்றிக்காககொமர்ஷல்வங்கியிடமிருந்துஎப்படியானதொருஆதரவுகிடைத்தது?

எங்கள் வணிகத்தின் தொடக்கத்தில் இருந்து எங்களுக்கு நிதி உதவி வழங்கிய முதல் வங்கி கொமர்ஷல் வங்கியாகும். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வியாபாரத்திற்கு கொமர்ஷல் வங்கியினால் வழங்கப்படும் நிதியுதவி மற்றும் ஆலோசனை சேவைகள் போன்ற பலதரப்பட்ட சேவைகள் அந்த வியாபாரத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். எங்கள் வணிகத்தை இன்றைய வெற்றி நிலைக்கு கொண்டு செல்வதில் அவர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவு அளப்பரியது.

 

6. புதியதொழில்முனைவோருக்குநீங்கள்என்னஆலோசனைவழங்குவீர்கள்?

உங்கள் தயாரிப்பு அல்லது சேவை சந்தையில் கிடைக்கும் மிக உயர்ந்த தரமான தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், எந்தவொரு வெற்றிகரமான தொழிலையும் தொடங்குவதற்கு முன், தொடர்புடைய சந்தை, போட்டித் தயாரிப்புகள் மற்றும் உங்களிடம் உள்ள வளங்கள் பற்றிய விரிவான ஆய்வில் ஈடுபடவும். நிதித் திட்டமிடல், தயாரிப்பு/சேவை மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான வணிகத் திட்டத்தை உருவாக்கவும் நேரம் ஒதுக்குங்கள்.

 

மேலதிகமாக, வணிகத்தைத் தொடங்கிய பிறகு, தொடர்புடைய துறையில் நுகர்வோர் நடத்தைகள் மற்றும் தொழில் செயற்பாடுகள்  குறித்து நீங்கள் தொடர்ந்து அறிந்திருக்க வேண்டும். மேலும், வணிக உறவுகளை உருவாக்குவது வெற்றிகரமான வணிகத்திற்கு முக்கியமானது.

 

எனவே, நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க நினைத்தால், இந்த உரையாடல் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். எனவே சதர்ன் ஹவுஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. எம்.டபிள்யூ.பி.எம்.என் நாணயக்கார அவர்களின் வெற்றிகரமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு மற்றுமொரு வெற்றிகரமான வணிக உரையாடலை நிறைவு செய்வோம்.

 

Disclaimer: This article is based solely on the inputs shared by the featured member. GlobalLinker does not necessarily endorse the views, opinions & facts stated by the member.

கருத்துகள்

பதிவிட்டவர்

GlobalLinker Staff

We are a team of experienced industry professionals committed to sharing our knowledge and skills with small & medium enterprises.

GlobalLinker இன் சுயவிவரத்தை காண்க

இந்த வாரம் அதிகம் படித்தது

What's Your Mindset?

கற்றல் & மேம்பாடு 17 வாரத்திற்கு முன்பு