படிப்படியாக அடைந்த வளர்ச்சியே வணிகத்தின் அடையாளம் - Amiron Organic

படிப்படியாக அடைந்த வளர்ச்சியே வணிகத்தின் அடையாளம் - Amiron Organic

SME இன்ஸ்பிரேஷன்ஸ்

GlobalLinker Staff

GlobalLinker Staff

86 வாரத்திற்கு முன்பு — 5 நிமிடம் படிக்க

Enterprise: Amiron Organic

Founder: சுலோகினி ரூபவதி சேகரம்

Industry: விவசாயம் மற்றும் வேளாண் உற்பத்திகள்

Year it was founded: 2014

Location: கும்புறுமூலை வாழைச்சேனை அருகாமையில்

 

நாம் அனைவரும் அறிந்த வெற்றிகரமான விவசாய மற்றும் கோழி வளர்ப்பு வணிகமான Amiron Organic பின்னால் இருக்கும் பெரிய நிழல் யார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவர் Amiron Organic வணிகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி- சுலோகினி ரூபவதி சேகரம் அவர்கள். எனவே சவால்களையும் அர்ப்பணிப்பையும் தாண்டி அவர் கடந்து வந்த இந்த வெற்றிகரமான பயணத்தை அவரிடமிருந்தே தெரிந்துக் கொள்வோம்.

 

1. அறிந்தவவர்கள்அறியாதவர்கள்எனஅனைவருக்கும் Amiron Organic என்னமாதிரியானவணிகம்எனகூறமுடியுமா? எப்படிஆரம்பித்தீர்கள்?

ஆம், அமிரோன் ஃபார்ம் என்பது ஆர்கானிக் மற்றும் இயற்கையான கோழி இறைச்சி மற்றும் முட்டைகளில் நிபுணத்துவம் பெற்ற குடும்ப வணிகமாகும். 100 வருடங்களுக்கு மேலாக எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான 22 ஏக்கர் கோழிப்பண்ணை கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை கும்புறுமூலை கிராமத்தில் அமைந்துள்ளது. பின்னர், அமிரோன் பண்ணை தயாரிப்புகளை சந்தைக்கு வழங்க Amiron Organic என்ற பெயரில் எங்கள் வணிகத்தை விரிவுபடுத்தினோம்.

 

2. உங்கள்வணிகத்தின்இதயம்என்றுநீங்கள்நம்பும்ஏதாவதுஇருக்கின்றதா?

நிச்சயமாக, நாம் அனைவரும் எங்கள் வணிகத்தின் இதயம் என்று கருதும் ஒரு எண்ணக்கரு ஒன்று உள்ளது. அது ““Eat Healthy. Live Long” (“ஆரோக்கியமாக சாப்பிடுங்கள். நீண்டநாள் வாழுங்கள்”) என்பதாகும். எனவே எமது மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை வழங்குவதற்கு நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

 

3. உங்கள்வணிகம்ஏனையபோட்டிவணிகங்களிலிருந்துஎவ்வாறுதனித்துவமாகவிளங்குகிறது?

ஆம், நான் முன்பே சொன்னது போல், நம் இதயம் போன்ற எண்ணக்கருவே நமது தனித்துவம். அதனால்தான் எங்களின் அனைத்து தயாரிப்புகளிலும் ஹார்மோன்கள் அல்லது வளர்ச்சி உதவிகள்சார் சேர்மானங்கள் எதுவும் இல்லை. இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். மேலும், எங்கள் தயாரிப்புகள் கரிம தயாரிப்புக்கள் என்றும் சான்றளிக்கப்பட்டுள்ளன.

 

4. வணிகத்தைஇந்தநிலைக்குகொண்டுவரஉங்கள்பயணத்தில்ஏதேனும்சவால்களைஎதிர்கொண்டீர்களா?

ஆம், நாமும் பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. எங்கள் வணிகப் பெயரை மக்களிடம் கொண்டு செல்வதே நாங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாக இருந்தது. மேலும், உயர் தரத்திற்கு சேதம் விளைவிக்காமல் பொருட்களை கொண்டு செல்வதும் கால்நடைகளுக்கு பொருத்தமான மூலப்பொருட்களைக் கண்டுபிடிப்பதும் எங்களுக்கு சவாலாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து இன்று நாம் இங்கு இருக்கின்றோம். இதுவரை எங்களுடன் இணைந்த சில முன்னணி வணிகப் பெயர்களைக் குறிப்பிடுகிறேன். அவை Good Market, Keels, Cargills, Arpico, Spar, Kenko1st, Premium Choice, Gusta Restaurant மற்றும் Hilton.

 

5. Amiron Organic உடன்நீங்கள்காணும்கனவைப்பற்றிபேசுவோம்அல்லவா?

நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவு விலையில் ஹார்மோன்கள் அல்லது வளர்ச்சி உதவிகள் இல்லாத கோழிப் பொருட்களை வழங்குவதே எனது கனவு. மேலும், Amiron Organic பெயரை இயற்கை வேளாண்மை துறையில் சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்று முன்னணியாக திகழும், நன்கு அறியப்பட்ட பெயராக மாற்றுவதும் ஆகும்.

 

6. உங்களதுபயணத்திற்குகொமர்ஷல்வங்கியிடமிருந்துஎன்னவகையானஆதரவைப்பெற்றீர்கள்?

எனக்கு மட்டுமல்ல எந்த ஒரு வணிகருக்கும் கொமர்ஷல் வங்கியின் ஆதரவு அதிகமாகவே கிடைக்கின்றது. அவர்கள் அந்தந்த வணிகங்களுக்கு ஏற்ப நிதி சேவைகளை வழங்குகிறார்கள். அடிப்படை சேவைகள் முதல் மேம்பட்ட சேவைகள் வரை, அவர்கள் எங்கள் வணிகத்திற்கும் சிறந்த சேவையை வழங்கினர். அன்று முதல் இன்று வரை அந்த ஆதரவு மாறாமல் கிடைத்து வருகின்றது.

 

7. ஒருவெற்றிகரமானவணிகமாகஎதிர்காலவணிகத்துறையில்நுழையநினைப்பவர்களுக்குஎன்னஅறிவுரைகளைவழங்கவிரும்புகின்றீர்கள்?

அவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், புதிய விடயங்களை முயற்சிக்கவும், ஒருபோதும் கற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டாம். நீங்கள் கற்றுக்கொண்டது எதிர்காலத்தில் ஒரு நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் விரும்பும் வணிகத் துறையைக் கண்டறியவும். அதன் பிறகு, உங்கள் திறமைகளை அதிகரித்து, வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இறுதியாக, நேரம் விலைமதிப்பற்றது என்பதை எப்போதும் நினைவில் வைத்து, அதைச் சிறப்பாகப் பயன்படுத்துங்கள்.

 

எனவே இலங்கையிலுள்ள வர்த்தகர்களில் Amiron Organic வர்த்தகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுலோகினி ரூபவதி சேகரத்தின் கனவு வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே வேளையில், மற்றொரு வெற்றிகரமான வணிக உரையாடலை இவ்வாறு முடிக்கின்றோம்.

 

Disclaimer: This article is based solely on the inputs shared by the featured member. GlobalLinker does not necessarily endorse the views, opinions & facts stated by the member.

கருத்துகள்

பதிவிட்டவர்

GlobalLinker Staff

We are a team of experienced industry professionals committed to sharing our knowledge and skills with small & medium enterprises.

GlobalLinker இன் சுயவிவரத்தை காண்க