68 வாரத்திற்கு முன்பு — 3 நிமிடம் படிக்க
நிறுவனம்: Sandasiri Hardware Stores
தொழில்: ஹாட்வெயார் தயாரிப்புகளை வழங்குபவர்
இது நிறுவப்பட்ட ஆண்டு: 1970
இடம்: மினுவாங்கொடை
தொழில்முனைவு என்பது வெற்றி தோல்விகள் நிறைந்த பயணம். ஆனால் நீங்கள் முயற்சி செய்தால் வெற்றியின் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்க முடியும். இவ்வளவு வெற்றிகரமான வணிகமாக விளங்கும் சந்தசிறி ஹாட்வெயார் ஸ்டோர்ஸ் உரிமையாளருடன் அவரது பயணத்தைப் பற்றிப் பேசுவோம்.
01) முதலில் உங்கள் வணிகத்தின் தொடக்கத்தைப் பற்றி பேசுவோமா?
சண்டசிறி ஹார்டுவேர் ஸ்டோர்ஸ் என்பது 1970 இல் தொடங்கப்பட்ட ஒரு தனிநபர் வணிகமாகும். தற்போது ஹாட்வெயார் தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கும் தயாரிப்பதற்கும் எங்கள் வணிகம் விரிவடைந்துள்ளது. நாங்கள் ERA வர்த்தகநாம குழாய்கள் மற்றும் பொருத்துதல்களின் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர்களாகவும் உள்ளோம்.
02) உங்கள் வணிகம் ஏனைய போட்டி வணிகங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
அனைவருக்கும் மலிவு விலையில் சிறந்த தரமான ஹாட்வெயார்; தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளோம்.
03) உங்கள் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட மற்றும் சமீபத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக மூலதனச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட சில முக்கிய சவால்கள்.
04) உங்களின் எதிர்கால வணிகக் கனவைப் பற்றிப் பேசுவோமா?
ஏற்றுமதி வணிகத்தில் நுழைந்து, நாட்டில் முன்னோடி ஏற்றுமதியாளராக முதலீடு செய்வது
05) உங்கள் பயணத்தின் போது கொமர்ஷல் வங்கியிடமிருந்து எவ்வாறான ஆதரவு கிடைத்தது?
நாங்கள் வணிகத்தை ஆரம்பித்ததில் இருந்து கொமர்ஷல் வங்கி எமது வெற்றியின் நிழலாக விளங்குகிறது. குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் போது, எங்கள் வணிகத்தை சீராக நடத்துவதற்கு அவர்கள் மிகவும் உதவியாக இருந்தனர்.
06) எதிர்கால தொழில்முனைவோருக்கு நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்?
தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். மேலும் சிறிய வெற்றிகளைக் கொண்டாடுங்கள் அவற்றை அனுபவிக்கவும். தொழில்முயற்சி என்பது ஏற்ற தாழ்வுகள் நிறைந்த பயணம். எனவே பின்னடைவுகளால் தளர்வடைய வேண்டாம்.
இந்த வாரம் அதிகம் படித்தது
டிரெண்டிங்
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வெற்றிக்கான புதிய பாதை
Digital & Technology 7 வாரத்திற்கு முன்பு
Learning & Development 20 வாரத்திற்கு முன்பு
Top Exports from India to Sri Lanka: A Detailed Analysis of Leading Products
Export Sector 21 வாரத்திற்கு முன்பு
கருத்துகள்
தயவு செய்து உள்நுழைய அல்லது பதிவு விவாதத்தில் சேர